நாட்டில் பல பகுதிகளில் கடல் அலை உயரும் அபாயம்!

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை வரை பல பகுதிகளில் கடல் அலை உயரும் சாத்தியம். இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவிக்கையில் . எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை புத்தளத்தில் இருந்து கொழும்பு காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பிரதேசங்களில் இரண்டு தசம் ஐந்து மீற்றர் முதல் 3 தசம் 5 மீற்றர் வரை கடல் அலை உயரலாம் என்று தெரிவித்தார்.

பால்மா, கேஸ் விலை அதி­க­ரிக்கும் சாத்தியம்!

ஒரு கிலோ பால்மாவின் விலை 75 ரூபா­வாலும் சமையல் வாயு சிலிண்­ட­ரொன்றின் விலை 245 ரூபா­வாலும் இன்னும் சில தினங்­களில் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அரச வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கி­றது.தற்­போது லண்­ட­னுக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாடு திரும்­பி­யதும் பால்மா விலை மற்றும் சமையல் கேஸ் விலை அதி­க­ரிப்பு தொடர்­பாக இறுதி முடி­வெ­டுக்­கப்­ப­டு­மெ­னவும் அவ்­வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

வரிச்சலுகை இன்று முதல் நடைமுறை!

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரி சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த மார்ச் 23 இல் கையொப்பமிட்டிருந்தார்.அதன்படி இந்த வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுமென அமைச்சர் தெரிவித்தார்.

புதிய வரைபடம் : 2.69 சதுர கி.மீ. அதிகரிப்பு!

தலைநகர் கொழும்புத் துறை­முக நக­ரத்­திட்டம் கார­ண­மாக இலங்­கையின் வரை­ப­டத்தில் 2.69 சதுரகி­லோ­மீற்றர் அதி­க­ரித்­துள்­ள­தாக நில­அ­ள­வை­யாளர் பீ.என்.பீ.உத­ய­காந்த தெரி­வித்­துள்ளார். புதிய இலங்கை வரை­ ப­டத்­தின்­படி சிலாபம் கடற்­கரைப் பிர­தேசம் குறை­வ­டைந்­துள்­ள­தா­கவும் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு கடற்­கரைப் பிர­தேசம் மாறு­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார். புதிய துறை­முக நக­ரத்­திட்டம் கார­ண­மாக மாறு­படும் கொழும்பு வரை­ப­டத்தை அச்­சிடும் நட­வ­டிக்­கைகள் இம்­மாதம் இறு­திக்குள் முடிவடையும் எனவும் அளவையாளர் திணைக்களம்

நேர்முக பரீட்சை!

கபொத சாதாரண தர பரீட்சையில் திறமை சித்திகளுடன் சித்தியெய்திய மாணவர்களை பிரபல பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சைக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு;ள்ளன.சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானதை தொடர்ந்து உடனடியாக பெற்றோர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்ததாக, கல்வியமைச்சின் தேசிய பாடசாலைகள் பணிப்பாளர் ஜயந்த விக்ரமநாயக்க தெரிவித்தார்.

இதய சுருக்க நோயிற்கான சத்திர சிகிச்சை!

இரத்த குழாய்களின் சுருக்கத்திற்கு தற்போது நுண் துளை சத்திர சிகிச்சை மூலமே தீர்வு காணப்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.தெற்காசியாவில் ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பெருந்தமனி சுருக்கநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு சரியான தருணங்களில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் ஐம்பது சதவீதத்திற்கு மேலானவர்கள் மரணமடையக்கூடிய வாய்ப்புண்டு.

சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை!

காஷ்மீரில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், உன்னாவ் பகுதியில் இளம்பெண் கற்பழிப்பு, அவரது தந்தை போலீஸ் நிலையத்தில் மரணம் மற்றும் பல்வேறு பகுதிகளில் சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.எனவே, சிறுமிகள் மற்றும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

முச்சக்கர வண்டிகளுக்கும் இன்று முதல் மீற்றர் பொருத்தப்படுவது அமுல் !

அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் இன்று முதல் மீற்றர் பொருத்தப்படுவது அமுல் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதியும் வீதி ஒழுங்கு முறைகளை கடைப்பிடிப்பதற்காகவும் மீற்றர் பொருத்தும் முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் ஆறு மாத காலத்திற்கு முன்னரே ஒப்பந்தச் சலுகையை முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கியதாகவும் வீதி பாதுகாப்புக்கான தேசிய சங்கத்தின் தலைவர் சிசிரா கொதாகொட தெரிவித்துள்ளார். எனினும், முச்சக்கரவண்டிகளின்  உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்ப்பட்டுள்ளது

தமிழர் ஒருவர் கைது

டொரெண்டோ பகுதியில் TTC பஸ்ஸில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் 47 வயதான  தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம்  செய்தி  வெளியிட்டுள்ளது.10ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் பஸ்ஸில்  பயணித்த 15 வயது சிறுமிக்கு பின்னால் நின்ற குறித்த நபர் அவரிடம் பாலியல் சேட்டைகளில் ஈடுப்பட்டதாகவும்  அதற்கு அடுத்த நாள் மாலையிலும் மேலும் 3 இளம் பெண்களிடம் அதே முறையில் பாலியல் சேட்டையில் ஈடுப்பட்டுள்ளார்.

வலி. வடக்கில் மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்ட காணி­களில் மக்­க­ளது  மீள் குடி­யேற்­றத்­திற்கு இடை­யூ­றான வகை யில் மூன்று காணப்­ப­டு­வ­தாக  மீள்­கு­டி­யேறும் மக்கள் தெரி­வித்­துள்­ளனர்

வலி. வடக்கில் மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்ட காணி­களில் மக்­க­ளது  மீள் குடி­யேற்­றத்­திற்கு இடை­யூ­றான வகை யில் மூன்று காணப்­ப­டு­வ­தாக  மீள்­கு­டி­யேறும் மக்கள் தெரி­வித்­துள்­ளனர். குறித்த இரா­ணுவ முகாம்கள் காணப்­ப­டு­வ­தா­னது தமது மீள் குடி­யேற்­றத்­தினை மேற்­கொள்­வதில் பெரும் சிரம்­மா­க­வுள்­ள­தாக மீள் குடி­யே­றிய மக்­களும் விசனம் தெரி­வித்­துள்­ளனர்.கடந்த 13ஆம் திகதி சித்­திரை புத்­தாண்டு தினத்­தன்று வலி வடக்கில் 683 ஏக்கர் காணிகள்  பொது மக்­க­ளிடம் மீள கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்­நி­லையில்   விடு­விக்­கப்­பட்ட காணி­க­ளிலே அம் மக்கள் மீளக் குடி­யேற்­றங்­களை மேற்­கொள்­வதில் இம் மூன்று இரா­ணுவ முகாங்­களும் இடை­யூ­றாக இருப்­ப­தாக பொது மக்­களால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.